மாவட்ட செய்திகள்

தேசியவாத காங்கிரசை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. சிவசேனாவில் இணைகிறார் உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து பேசினார்

தேசியவாத காங்கிரசை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ., உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இதனால் அவர் சிவசேனாவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

மும்பை,

சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ. திலீப் சோபால் பதவியை ராஜினாமா செய்து விட்டு நேற்று முன்தினம் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்

இந்த பரபரப்புக்கு மத்தியில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அவதுத் தத்காரே எம்.எல்.ஏ. நேற்று திடீரென மும்பை பாந்திராவில் உள்ள மாதோ இல்லத்தில் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இவரது உறவினரான ராய்காட் தொகுதி எம்.பி.யும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான சுனில் தத்காரேயும் சிவசேனாவில் இணைய இருப்பதாக சமீப நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவதுத் தத்காரே நேற்று உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவதுத் தத்காரே பதிலளித்து கூறுகையில், நான் தீவிர அரசியலில் இருக்க விரும்பு கிறேன். இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி உள்ளேன். எனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அடுத்த 2 நாட்களில் அறிவிப்பேன். அதற்கு முன்னதாக எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்வேன் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு