மாவட்ட செய்திகள்

பரமத்தி வேலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் பலி

பரமத்தி வேலூர் அருகே, முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 5 வயது சிறுவன் பலியானான்.

தினத்தந்தி

பரமத்திவேலூர்,

பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சவுந்தர்ராஜன் (வயது 23). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்திருந்த பஞ்சபாளையத்தை சேர்ந்த தனது சகோதரியின் மகன் லோகித்தை (5) மீண்டும் பஞ்சபாளையத்தில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளின் முன்னால் லோகித்தை அமர வைத்து அழைத்து சென்றுள்ளார்.

பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த சிறுவன் லோகித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சவுந்தர்ராஜன் படுகாயம் அடைந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்