மாவட்ட செய்திகள்

பாபநாசம் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கொத்தனார் சாவு - மகன் உள்பட 2 பேர் படுகாயம்

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கொத்தனார் பலியானார். அவருடைய மகன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் முருகானந்தம் (வயது 35). கொத்தனார். இவருடைய மகன் ஹரிஹரன் (11). நேற்று மாலை இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கபிஸ்தலம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

பாபநாசம் படுகை புதுத்தெரு மெயின் ரோட்டில் வந்தபோது எதிரே ஒன்பத்துவேலி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (29) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், முருகானந்தம், ஹரிஹரன் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முருகானந்தம் இறந்தார்.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த அவருடைய மகன் ஹரிஹரனும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அஜித்குமார் ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்