மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; மீனவர் பலி

கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிள்-வேன் மோதியதில் மீனவர் பலியானார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் தேசப்பன் (வயது 45). மீனவர். இவரது மனைவி சர்மிளா (38). இவர்களுக்கு தருண் (15) என்ற மகனும், தர்ஷினி (14) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆரம்பாக்கம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தேசப்பன் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலை வழியே மோட்டார் சைக்கிளில் வந்தபோது, எதிரே வந்த தனியார் நிறுவன மினி லோடு வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT