மாவட்ட செய்திகள்

கரூரில் குவிந்து கிடக்கும் குப்பைகள் வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் குவிந்து கிடக்கும் குப்பை தீ வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தினத்தந்தி

கரூர்

கரூர் திருகாம்புலியூர் ரவுண்டானாவில் இருந்து மதுரை பை-பாஸ் சாலையில் தினமும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், லாரி, பஸ் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கின்றனர். அந்த சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதில் பிளாஸ்டிக் பைகள், வாழை இலைகள், வீட்டு உபயோக கழிவுபொருட்கள் என பல்வேறு பொருட்கள் கொட்டி கிடக்கிறது. இந்நிலையில் சிலர் நேற்று அந்த குப்பைக்கு தீ வைத்துள்ளனர்.

இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக மாறியது. இதனால் அந்த வழியாக சென்றவாகன ஓட்டிகள் சிரமப்பட்டு கடந்து செல்ல வேண்டியிருந்தது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு புகையால் கண் எரிச்சல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளனார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்