மாவட்ட செய்திகள்

செங்குத்தாக மலையேறும் ரெயில்

சுவிட்சர்லாந்து நாட்டில், செங்குத்தாக பயணிக்கும் மலை ரெயில் பயன்படுத்தப்படுகிறது.

தினத்தந்தி

சுவிட்சர்லாந்து நாட்டில், செங்குத்தாக பயணிக்கும் மலை ரெயில் பயன்படுத்தப்படுகிறது. சுவிஸ் நாட்டின் செக்வெஸ் நகரில் இருந்து, மலை கிராமமான ஸ்டூஸ் வரையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் பாதையில் தான், இந்த ரெயில் சீறிப் பாய்கிறது. ஸ்டூஸ் கிராமம் இருக்கும் மலையில் பெரும்பாலான பகுதிகள் செங்குத்தானவை. ஆகையால் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் ரெயில் பாதையும் செங்குத்தாகவே காணப் படுகிறது. அத்தகைய செங்குத்தான மலைப்பாதைகளுக்காக இந்த பிரத்யேக ரெயிலைத் தயாரித்திருக்கிறார்கள். 53 மில்லியன் டாலர்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ரெயிலுக்கு, சுவிஸ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரெயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ஒரு வாரத்திலேயே அடுத்த வருடத்திற்கான முன்பதிவுகள் முடிந்து விட்டதாம். அந்தளவிற்கு கடும் போட்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறது, மலை ரெயில்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு