பூந்தமல்லி,
சென்னை, ஏழுகிணறு, போர்ச்சுகஸ் சர்ச் தெருவை சேர்ந்தவர் முகமது சுகைல்(வயது 29). பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், ஆலப்பாக்கம் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறிய முகமது சுகைல் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.