மாவட்ட செய்திகள்

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் கல்லறையை விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமனின் கல்லறையை விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளியான யாகூப் மேமன் கடந்த 2015-ம் ஆண்டு நாக்பூர் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான். பின்னர் அவரது உடல் மெரின் லைன்ஸ் படா கப்ரஸ்தான் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் யாகூப் மேமனின் கல்லறை விற்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் லோக்மான்யா திலக் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

மார்ச் மாதம் புகார்

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், யாகூப் மேனனின் கல்லறை விற்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கடந்த மார்ச்சில் புகார் அளித்தனர். இடுகாட்டில் மேமன் குடும்பத்தினருக்கு 7 கல்லறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் யாகூப் உள்பட குடும்பத்தினர் 4 பேரின் கல்லறைகள் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக புகாரில் கூறி இருந்தனர். இதுதொடர்பாக பாம்பே ஜூம்மா மசூதி அறக்கட்டளை அறங்காவலர், மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்தோம். கொரோனா பிரச்சினை காரணமாக இந்த வழக்கு மீதான விசாரணையை தற்போது தொடங்கி உள்ளோம் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு