மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே, திருமண ஆசை காட்டி மாணவி கடத்தல் - போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது

ஆண்டிப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி மாணவி கடத்திய ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள மாயாண்டிபட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 24) ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்த மாணவியை கடத்தி சென்று விட்டதாக ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

அப்போது விஜய், மாணவியுடன் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியை மீட்டு விசாரித்தனர். இதில் திருமண ஆசை காட்டி விஜய் கடத்தி வந்ததாக மாணவி கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் விஜய்யை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவி பெற் றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்