மாவட்ட செய்திகள்

அந்தியூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் ஒட்டாததால் அதிகாரி சிறைவைப்பு

அந்தியூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் ஓட்டாததால் சங்க அதிகாரியை சிறைவைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

அந்தியூர்,

அந்தியூர் அருகே கள்ளிமடைகுட்டையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 165 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள். இந்த சங்க தேர்தலுக்காக கடந்த 9-ந் தேதி 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்கள். இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று காலை ஒட்டுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக சங்க உறுப்பினர் கள் அலுவலகம் முன்பு காத்திருந்தார்கள். ஆனால் வெகு நேரமாகியும் இறுதி வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உறுப்பினர்கள் சங்க செயல் அதிகாரி வெங்கிடுசாமியை உள்ளே வைத்து அலுவலகத்தின் ஷட்டரை அடைத்து சிறைவைத்தார் கள்.

பின்னர் சங்கத்தின் முன்பு செல்லும் அந்தியூர்-கள்ளிமடைகுட்டை ரோட்டுக்கு வந்தார்கள். அப்போது அந்தியூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கள்ளிமடைகுட்டைக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் கூறும்போது, இறுதி வேட்பாளர் பட்டியலை ஒட்டி சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றனர்.

இதை கேட்ட போலீசார், நீங்கள் இவ்வாறு சாலை மறியலில் ஈடுபடுவதால் வேலை க்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே சாலை மறியலை கைவிடுங்கள். சங்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர். அதை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் சிறை வைக்கப்பட்ட சங்க அதிகாரியை போலீசார் மீட்டனர். இந்த சாலை மறியலால் அந்தியூர்-கள்ளிமடைகுட்டை ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்