மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி

ஓசூர் அருகே இரும்பு கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

ஓசூர்,

ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளி (வயது 27). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வள்ளி, வீட்டு அருகே இருந்த இரும்பு கம்பியை தொட்டுள்ளார்.

அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வள்ளியை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி பெண் பலியானது தொடர்பாக சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை