மாவட்ட செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே, ஆசிரியர் மனைவி தீக்குளித்து தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் அடியத்தூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவர், மல்லப்பள்ளி அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி கீதாமணி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கீதாமணிக்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அமாவாசையன்று கீதாமணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக தெரிகிறது. இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கீதாமணியின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்