மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே, அறுவடைக்கு தயாராகியுள்ள மஞ்சள் கிழங்கு செடி

கோவில்பட்டி அருகே பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் கிழங்கு செடிகள் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளன.

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் கிழங்கு செடிகள் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளன.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை ஜன. 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்கு மக்கள் மஞ்சள் கிழங்கு குலை, கண்ணுபிள்ளை செடியுடன் வீட்டு களம், தொழில் நிறுவனங்கள், வாகனங்களில் கட்டி தொங்க விட்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

இந்த பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் கோவில்பட்டிய அடுத்துள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் மஞ்சள் செடிகள் ஆடிமாதம் பயிரிட்டு பாங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

அறுவடைக்கு தயார்

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ஆடி மாதத்தில் மந்தித்தோப்பு கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மஞ்சள் கிழங்கு பயிரிட்டுள்ளனர்.

இந்த செடிகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு சிலநாட்களுக்கு முன்பு இந்த மஞ்சள் கிழங்கு செடிகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?