மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் அருகே ஆடு, மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு

குமாரபாளையம் அருகே, விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆடு, மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம்,

மத்திய அரசின் சார்பில் விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு பதிலாக சாலையோரங்களில் புதைவட கம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு உயர் மின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு வருட வாடகையும் வழங்கிட வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று 4-வது நாளாக நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தங்களது ஆடு, மாடுகளை ஓட்டி வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நேற்று தி.மு.க. சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. மேட்டூர் கோபால், சங்ககிரி ஒன்றியச் செயலாளர் நிர்மலா, நாமக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் செயலாளர் ரங்கசாமி உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை