மாவட்ட செய்திகள்

கே.வி.குப்பம் அருகே, முன்விரோதத்தில் மோதல்; 2 பேர் கைது

கே.வி.குப்பம் அருகே முன்விரோதத்தில் மோதல் காரணமாக 2 பேரை கைது செய்தனர்.

தினத்தந்தி

கே.வி.குப்பம்,

கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பம் அருகே உள்ள மங்காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 39). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மாயாண்டி (55), இவரது மகன்கள் வேல்முருகன் (39), புண்ணியகோட்டி. இவர்களுக்கும் சிதம்பரத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சிதம்பரத்தின் நிலத்தில் மாயாண்டி, வேல்முருகன், புண்ணியகோட்டி ஆகிய 3 பேரும் உடைந்த செங்கற்களை கொண்டு போய் கொட்டினர். இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரம் அவர்களை தட்டிக் கேட்டார். வாய்தகராறு முற்றிய நிலையில் மாயாண்டி, வேல்முருகன், புண்ணியகோட்டி ஆகிய 3 பேரும் சிதம்பரத்தை இரும்புத்தடி, கருங்கல் போன்றவற்றால் சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயாண்டி, வேல்முருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் புண்ணியகோட்டியை தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு