மாவட்ட செய்திகள்

நெமிலி அருகே; விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் பலி

நெமிலி அருகே விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வரதன். இவருடைய மகன் உதயகுமார் (வயது 38). இவர் அரக்கோணத்தில் ரெயில்வே போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 28-ந் தேதி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க மோட்டார்சைக்கிளில் நெமிலி கடைவீதிக்கு சென்றார்.

அங்கு பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையின் படுகாயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சைபெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

உதயகுமாருக்கு லாவண்யா என்ற மனைவியும், பிரவீன்குமார் (12), ரஞ்சித்குமார் (10), ஜெகன்குமார் (8) ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு