மாவட்ட செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே கள்ளக்காதலன் வீட்டில் காயங்களுடன் பெண் பிணம் சாவில் சந்தேகம் இருப்பதாக மகன் போலீசில் புகார்

பள்ளிப்பட்டு அருகே கள்ளக்காதலன் வீட்டில் கழுத்தில் காயங்களுடன் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது மகன் போலீசில் புகார் செய்தார்.

தினத்தந்தி

பள்ளிப்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் வட்டபாக்கம் நாவலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுமதி (வயது 52). இவர்களது மகன் ஜெயபால் (27). சேகர் 8 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். சுமதிக்கும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி பேட்டை கிராமம், நெல்லிக்குப்பம் தெருவில் வசிக்கும் ரங்கநாதன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவரது வீட்டில் கடந்த 5 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சுமதி வீட்டு வராண்டாவில் கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அவரது மகன் ஜெயபால் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது தாய் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியுடன் தங்கியிருந்த கள்ளக்காதலன் ரங்கநாதனை தேடி வருகின்றனர். சுமதி எப்படி இறந்தார்? அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்