மாவட்ட செய்திகள்

பொங்கலூர் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிது

பொங்கலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மளிகை கடைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.

பொங்கலூர்,

பல்லடம் காந்திநகரை சேர்ந்தவர் ரவிக்குமார்(வயது 38). அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஸ்ரீபிரியா(29). இந்த நிலையில் திருப்பூர் முத்தணம்பாளையத்தில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு செல்வதற்காக ரவிக்குமார் தனது மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

திருப்பூர்-தாராபுரம் சாலையில் பொல்லிக்காளிபாளையம் நால்ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது, எதிரே திருப்பூரில் இருந்து வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதனால் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஸ்ரீபிரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த அவினாசிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் ரவிக்குமாரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்