மாவட்ட செய்திகள்

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ள அத்திபேடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 45). இவரது மகன் விக்னேஷ் (18). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான கவுதம் (18), நெல்சன் (16) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கவுதம், நெல்சன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நெல்சன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு ஏதாவது வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதா? அல்லது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானதா? என்று விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்