மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் அருகே, டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு

சங்கரன்கோவில் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைப்பேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் வருண்குமார் (வயது 24). டிராக்டர் டிரைவர். நேற்று முன்தினம் கண்டிகைப்பேரி பகுதியில் உள்ள கல்குவாரி பணிக்காக டிராக்டரில் சென்றார்.

அந்த பகுதியில் சென்றபோது திடீரென 30 அடி பள்ளத்தில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த வருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை