மாவட்ட செய்திகள்

தண்டராம்பட்டு அருகே விவசாயி வெட்டிக் கொலை போலீஸ் விசாரணை

தண்டராம்பட்டு அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு நெடுங்காவடியை சேர்ந்தவர் ராஜா (வயது 55), விவசாயி. இவருக்கு அமுதா (50) என்ற மனைவியும், லதா, செல்வி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 1 ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை ராஜாவிடம் அடமானம் வைத்து ரூ.8 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். இதில் ரூ.6 லட்சத்தை ஜெயபாலன், ராஜாவிடம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் ஜெயபாலன், ராஜாவை ஏமாற்றி அடமானத்திற்காக கொடுத்த பத்திரத்தை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கு ராஜாவிற்கு சாதகமாக முடிந்து உள்ளது. இதனால் ராஜாவுக்கும், ஜெயபாலனுக்கும் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை தனது நிலத்திற்கு ராஜா சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த ஜெயபாலன், ராஜாவை அரிவாளால் கொடூரமாக சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

ராஜா கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் ராஜாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலத்திற்கு வந்த அவரது குடும்பத்தினர், ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து சாத்தனூர் அணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்