மாவட்ட செய்திகள்

காரிமங்கலம் அருகே, மோட்டார் சைக்கிள் மோதி துணி வியாபாரி சாவு

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி துணி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

காரிமங்கலம்,

காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). துணி வியாபாரி. இவர் கடந்த 2-ந் தேதி துணி வியாபாரத்திற்காக பொம்மஅள்ளிக்கு சென்றார். அங்கு வியாபாரத்தை முடித்து கொண்டு மாலை ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

அப்போது பொம்மஅள்ளி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் நடந்து சென்ற போது பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று செந்தில்குமார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்