மாவட்ட செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

சிங்கப்பெருமாள் கோவில் அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் 2 பேர் கைது செய்தனர்.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அனுமந்தபுரம் கூட்டு ரோட்டில் புகையிலைப் பொருட்களை மூட்டைகளில் சிலர் பதுக்கி வைத்திருப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, அங்கு 6 பிளாஸ்டிக் கோணி பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (வயது 40), சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (35), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட 1,200 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்