திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வேலு (வயது 22). பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த வேலு கட்டுமானப்பணிகள் முடிவடையாதநிலையில் உள்ள தனது வீட்டின் மாடியில் படுக்க சென்றார்.
மாடி படிக்கட்டில் இறங்கும் போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.