திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை சபரிநகரை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 65). இவர் அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று மகாதேவன் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.4 ஆயிரம், கிலோ வெள்ளிப்பொருட்கள், ஒரு செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மகாதேவன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.