மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த நெமிலிச்சேரி நாகாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் மணிகண்டன் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். மணிகண்டன் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால் அவர் தான் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கடன் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்த அவர் திருவள்ளூருக்கு வந்து விஷம் குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். பின்னர் அவர் இதுகுறித்து தனது மனைவி கீதாவுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கீதா மற்றும் அவரது உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருநின்றவூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் மணிகண்டன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து கீதா திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை