மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே முககவசம் அணிய சொன்ன செல்போன் கடை ஊழியருக்கு அடி-உதை வாலிபர் கைது

திருவள்ளூர் அருகே முககவசம் அணிய சொன்ன செல்போன் கடை ஊழியருக்கு அடி-உதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசை தெற்கு மாவட்ட தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40). இவர் திருமழிசை பகுதியில் செல்போன் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தேவராஜ் வழக்கம்போல் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி ஆண்டர்சன் பேட்டையை சேர்ந்த பிரசாந்த் (வயது 20) என்பவர் செல்போன் வாங்குவதற்காக வந்தார். அவர் முககவசம் அணியாமல் இருந்தார். இதை பார்த்த கடை ஊழியர்கள் முககவசம் அணியுமாறு கூறினார்கள். அதற்கு அவர் கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு கடையில் இருந்தவர்களை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார்.

இதுகுறித்து தேவராஜ் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்