மாவட்ட செய்திகள்

துமகூரு அருகே பயங்கரம் 5 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தை கிராம மக்கள் பீதி

துமகூரு அருகே 5 வயது சிறுமியை சிறுத்தை கடித்து கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

துமகூரு,

துமகூரு மாவட்டம் கெப்பூர் பைஜேனஹள்ளி கிராமத்தில் அடிக்கடி சிறுத்தை புகுந்து கால்நடைகளை வேட்டையாடி செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ்(வயது 35). இவரது மனைவி ஷில்பா(29).

இந்த தம்பதிக்கு 5 வயதில் சந்தனா என்ற பெண் குழந்தை இருந்தது. இவர்கள் வனப்பகுதியையொட்டி உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று காலையில் சீனிவாஸ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். ஷில்பா தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டின் முன்பு சிறுமி சந்தனா விளையாடிக் கொண்டிருந்தாள். ஷில்பா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

இதையடுத்து ஷில்பா வெளியே வந்தபோது சந்தனாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷில்பா தனது உறவினருடன் அப்பகுதியில் தேடிப்பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் ரத்தக்கரை இருந்தது. அதன் அருகில் சில எலும்புகள் கிடந்தன. மேலும் சந்தனாவின் உடையும் அப்பகுதியில் கிழிந்து கிடந்தது. இதனால் சந்தனாவை சிறுத்தை கடித்து கொன்றிருக்கலாம் என்று அப்பகுதியினர் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது அதில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வந்து சிறுமி சந்தனாவை அடித்து கொன்று வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதனால் வனத்துறையினரும், அந்த கிராம மக்களும் பீதியும், சோகமும் அடைந்தனர். பின்னர் அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் இரும்பு கூண்டை வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை