மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே, மின்சாரம் தாக்கி மாணவி பலி

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளி. இவரது மகள் பிரியதர்ஷினி(வயது 12). இவர் பரிக்கல் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அருகே உள்ள கெடிலம் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி துணி காயப் போடுவதற்காக வீட்டின் மாடிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்சார ஒயரில் அவரது கை உரசியதாக தெரிகிறது.

இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே பிரியதர்ஷினி துடிதுடித்து செத்தார். இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்