மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே கோர்ட்டு உதவியாளர் தற்கொலை

உத்திரமேரூர் அருகே கோர்ட்டு உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

உத்திரமேரூர்,

உத்திரமேரூரை அடுத்த மருதம் காலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 55). காஞ்சீபுரம் சப்-கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகவில்லை. காஞ்சீபுரத்தில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் மருதம் கிராமத்தில் இருந்து மலையாங்குளம் செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரக்கிளையில் அண்ணாதுரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின்பேரில் போலீசார் விரைந்து சென்று அண்ணாதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்