மாவட்ட செய்திகள்

வடமதுரை அருகே, தலை துண்டித்து வாலிபர் படுகொலை - கிணற்றில் உடல் வீச்சு

வடமதுரை அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றனர்.

தினத்தந்தி

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எட்டிக்குளத்துப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மோளப்பாடியூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான 40 அடி ஆழ கிணறு உள்ளது.

நேற்று காலை அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் கிணற்றின் அருகே சென்று பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் அழுகிய நிலையில், தலை இல்லாமல் ஒரு உடல் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்துக்கு திண்டுக்கல் தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் கிணற்றுக்குள் இருந்து உடலை மேலே கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

அழுகிய நிலையில் உடல் இருந்ததால் அதனை உடனடியாக தீயணைப்பு துறையினரால் மேலே கொண்டுவர முடியவில்லை. சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு உடல் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் 35 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், அவருடைய தலையை துண்டித்து படுகொலை செய்துவிட்டு உடலை கிணற்றுக்குள் மர்ம நபர்கள் வீசிச்சென்றதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் பிணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு