மாவட்ட செய்திகள்

வில்லியனூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர்- கண்டக்டர் மீது தாக்குதல் 3 பேருக்கு வலைவீச்சு

வில்லியனூர் அருகே புதுவை அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் - கண்டக்டரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே சேந்தநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 44). இவர் புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் புதுவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெருங்களூரு நோக்கி சென்றார்.

வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதுவதுபோல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் பஸ்சை பின்தொடர்ந்து சென்று, அரசூர் ரெயில்வே கேட் அருகே வழிமறித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து டிரைவர் தேவநாதனை சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க முயன்ற கண்டக்டர் சுப்பிரமணியத்தையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது.

இந்த தாக்குதலில் டிரைவர் தேவநாதன் முகத்தில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு