மாவட்ட செய்திகள்

நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு

நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக சரவணன் பொறுப்பு ஏற்றார்.

நெல்லை,

நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக சாம்சன் பணியாற்றி வந்தார். அவர் சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னையில் பணியாற்றி வந்த துணை கமிஷனர் சரவணன் நெல்லை மாநகர துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

அவர், நேற்று காலை பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் புதிய போலீஸ் துணை கமிஷனர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகர பகுதியில் சட்டம்-ஒழுங்கு மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். வருங்கால இந்தியாவின் தூண்கள் மாணவ-மாணவிகள் ஆவார்கள். அவர்கள் நலன் பாதுகாக்கப்படும். கஞ்சா நடமாட்டம் இருந்தால் தடுக்கப்படும். சாதி மோதல்கள், பழிக்குப்பழி போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். அவர்களின் குறைகள் உடனுக்கு உடன் நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய போலீஸ் துணை கமிஷனர் சரவணன், கடந்த 2003-ம் ஆண்டு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனார். பின்னர் அவர், ராமநாதபுரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றினார். 2010-ம் ஆண்டு சென்னையில் உளவுத்துறை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். 2013-ம் ஆண்டு உளவுத்துறை துணை கமிஷனராக பொறுப்பு வகித்தார்.

பின்னர் அவர் கோவையில் துணை கமிஷனராக பணியாற்றினார். 2017-ம் ஆண்டு சென்னையில் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி