மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

தினத்தந்தி

நெல்லை,

தமிழகத்தில் அரசு பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. 1-ம் வகுப்பில் சேர மாணவர்கள் வராதபட்சத்தில், பெற்றோர் தரும் ஆவணத்தின்பேரில், சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஆரம்ப, நடுநிலைப் பள்ளிக்கூடங்களில் கடந்த சில நாட்களாக 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து அனைத்து ஆரம்ப, நடுநிலைப் பள்ளிக்கூடங்களிலும் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான (2 முதல் 10-ம் வகுப்பு) மாணவர் சேர்க்கையும் தொடங்கியது.

பள்ளியில் மாணவர்கள் சேரும்போதே இலவச நோட்டு புத்தகம், சீருடை, கல்வி உபகரண பொருட்கள் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக அளவில் இருந்தால் காலையில் 20 பேர், மாலையில் 20 பேர் என சேர்க்கை நடத்த வேண்டும் என்றும், அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் நேற்று மாணவர் சேர்க்கை நடந்தது.

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, டவுன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களிலும் மாணவர் சேர்க்கை நடந்தது. 6, 9-ம் வகுப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் அதிக அளவில் வந்து இருந்தனர். இதனால் பள்ளிக்கூட வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை வருகிற 24-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

சில அரசு உதவிபெறும் பல பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பில் மாணவர்கள் சேராமல், தனியார் பள்ளிக்கூடங்களில் சேருகின்றனர். இதனால் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் அரசு நிர்ணயித்த மாணவர்கள் சேராத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக மாணவர் சேர்க்கைக்காக வீடு வீடாக சென்று, குழந்தைகளை தங்களது பள்ளிக்கூடங்களில் சேர்க்குமாறு அறிவுறுத்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்