துடியலூர்
கவுண்டம்பாளையம் அருகே உள்ள சங்கனூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கும் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த நர்மதா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது.
இந்த நிலையில் நர்மதா கர்ப்பமாக இருந்ததால் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். சதீஷ்குமார் மட்டும் தனது வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் உள்ளதால், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சதீஷ்குமார் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.