மாவட்ட செய்திகள்

வன்கொடுமை வழக்கில் பரம்பீர் சிங் மீது 20-ந் தேதி வரை நடவடிக்கை எடுக்கப்படாது; ஐகோர்ட்டில், அரசு உறுதி

மராட்டிய உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் போலீசாரை மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்தியதாக முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனா பரம்பீர் சிங் குற்றம் சாட்டினார்.

தினத்தந்தி

இந்தநிலையில் பரம்பீர் சிங் தானே போலீஸ் கமிஷனராக கடந்த 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றியபோது தன்னிடம் மோசமாக நடந்துகொண்டாக இன்ஸ்பெக்டர் பீம்ராவ் கட்கே என்பவர் புகார் அளித்தார். இதன்பேரில் பரம்பீர் சிங் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தன்மீது போடப்பட்டுள்ள வழக்குப்பதிவை எதிர்த்து பரம்பீர் சிங் மும்பை ஐகோர்ட்டை நாடி உள்ளார். இந்த வழக்கு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் ஊழல் புகார் எழுப்பியதற்கு பழிவாங்கும் விதமாக பரம்பீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

எனவே அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் வரும் 20-ந் தேதி வரை பரம்பீர் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என மாநில அரசு ஐகோர்ட்டில் உறுதி அளித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்