ராணிப்பேட்டை,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறும் உடல்நலம் குன்றிய மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கும் விழா ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு பொட்டலங்களை வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் கோமதி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.