மாவட்ட செய்திகள்

இதுவரை இல்லாத அளவில் மேலும் 895 பேர் கொரோனாவுக்கு பலி

மராட்டியத்தில் இதுவரை இ்ல்லாத அளவில் மேலும் 895 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக வைரசின் 2-வது அலை மாநிலத்தை திணறடித்து வருகிறது. இதில் நாள் தோறும் மாநிலத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இருந்தது.

இந்தநிலையில் நேற்று மீண்டும் பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மாநிலத்தில் புதிதாக 66 ஆயிரத்து 358 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.எனினும் ஆறுதல் அளிக்கும் வகையில் 2-வது நாளாக குணமானவர்கள் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது. நேற்று 67 ஆயிரத்து 752 போ குணமாகினர். நேற்று முன்தினம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து இருந்தனர்.

மாநிலத்தில் இதுவரை 44 லட்சத்து 10 ஆயிரத்து 85 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 36 லட்சத்து 69 ஆயிரத்து 548 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 72 ஆயிரத்து 434 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் 895 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். தொற்றுக்கு அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தில் இதுவரை 66 ஆயிரத்து 179 பேர் உயிரிழந்து உள்ளனர்.

உயிரிழப்பு அதிகரித்து இருப்பதால் தகனம், அடக்கம் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

மாநிலத்தில் பாதிப்பு அதிகரித்து உள்ள போதும் தலைநகர் மும்பையில் குறைந்து உள்ளது. நகரில் புதிதாக 4 ஆயிரத்து 14 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 541 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மேலும் 59 பேர் பலியானதால் நகரில் வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 912 ஆக உயர்ந்து உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்