மாவட்ட செய்திகள்

கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 மீனவர்கள் பலி

எண்ணூர் கடற்கரை சாலையில் கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 மீனவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

திருவொற்றியூர்,

எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மோகன்(வயது 26). காசிமேடு புதுமனை குப்பத்தைச் சேர்ந்தவர் லியோ(28). மீனவர்களான இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்கள்.

நண்பர்கள் இருவரும் நேற்று அதிகாலையில் மீன்பிடிப்பதற்காக எண்ணூரில் இருந்து காசிமேட்டுக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். எண்ணூர் கடற்கரை சாலையில் பாரதிநகர் வந்தபோது அந்த பகுதி இருட்டாக இருந்தது.

அங்கு சாலையோரம் ஒரு கன்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இருட்டில் லாரி நிற்பது தெரியாததால், கன்டெய்னர் லாரி மீது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மோகன், லியோ இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான மீனவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜயன்(40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு