மாவட்ட செய்திகள்

கடம்பத்தூரில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் அவதி

கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே கடம்பத்தூரில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே கடம்பத்தூரில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. கடந்த 3 நாட்களாக கழிவுநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அரசு அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரை அப்புறப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்