மாவட்ட செய்திகள்

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்றவர் கைது

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்றவர் கைது.

தினத்தந்தி

நாமக்கல்,

எருமப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பெரிய சித்தம்பட்டி பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் அந்த பகுதிக்கு சென்று கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதன்பேரில் நாமக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் பெரிய சித்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரகு (வயது 46) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து ரகு மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 லிட்டர் சாராயம் மற்றும் 1,100 லிட்டர் ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்