மாவட்ட செய்திகள்

கலசபாக்கம் அருகே உள்ள மிருகண்டாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு

மிருகண்டாநதி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்துவைத்தார்.

திருவண்ணாமலை,

கலசபாக்கம் அருகே உள்ள மிருகண்டாநதி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு தண்ணீரை திறந்துவைத்தார். தொடர்ந்து 7 நாட்களுக்கு வினாடிக்கு 94 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:-

மிருகண்டாநதி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தொடர்ந்து 7 நாட்களுக்கு வினாடிக்கு 94 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் காந்தபாளையம், நல்லான்பிள்ளைபெற்றாள், கங்கலமாதேவி, கேட்டவரம்பாளையம், சிறுவள்ளுர், பிள்ளையார் கோயில், சிறுவள்ளுர் காலனி, வில்வாரணி, அம்மாபுரம், எலத்தூர் ஆகிய அணைக்கட்டுகளின் கீழ் பயன்பெறும் 17 ஏரிகள் மற்றும் அணைக்கட்டு வாயிலாக மொத்தம் 3,190.96 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி பெறும்.

மிருகண்டாநதி அணையிலிருந்து திறந்துவிடப்படும் பாசன நீரை சிக்கனமாகவும், துறை அலுவலர்களின் அறிவுரைப்படியும் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட வேண்டும். மேல்சோழங்குப்பம் கிராமத்திலிருந்து மிருகண்டாநதி அணைக்கு வரும் சாலை சீரமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம், தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 2 கிலோ மீட்டர் நீளம் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வி.பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவிப் பொறியாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்