வடவள்ளி
கோவையை அடுத்த வடவள்ளி அருகே பொம்மனம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் காபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதை அறிந்த பொதுமக்கள் வந்து செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இதையடுத்து 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு செல்போன் காபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தினரை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த வடவள்ளி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட் டது. இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்