மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் வசிக்கும் பிறமொழியினர் கன்னடத்தை கட்டாயம் கற்க வேண்டும்

கர்நாடகத்தில் வசிக்கும் பிறமொழியினர் கன்னடத்தை கட்டாயம் கற்க வேண்டும் என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூரு துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கன்னட ராஜ்யோத்சவா விழா மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி பேசுகையில், கர்நாடகத்தில் வசிக்கும் பிறமொழியினர் கன்னடத்தை கட்டாயம் கற்க வேண்டும். எழுதவும், படிக்கவும் கற்க வேண்டியது அவசியம். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பெங்களூருவில் வசிக்கிறார்கள். அவர்களின் தாய்மொழி எதுவாக இருந்தாலும், முதலில் கன்னடத்தை கற்க வேண்டும். அப்போது தான் கன்னட கலாசாரத்தை அறிந்துகொள்ள முடியும் என்றார்.

விழாவில் மேயர் சம்பத்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்