மாவட்ட செய்திகள்

பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கீழ் கைத்தளா பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(வயது 47). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி சுமித்திரா(40) என்ற மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் சுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால், அவரது மனைவி சுமித்திரா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மன விரக்தியில் இருந்த சுப்பிரமணி இன்று மதியம் அரவேனுவில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் குத்தகைக்கு வாங்கிய தனது தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்