மாவட்ட செய்திகள்

திருநின்றவூரில் 15 அடி பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி பெயிண்டர் பலி

திருநின்றவூரில் 15 அடி பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி பெயிண்டர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

ஆவடி அடுத்த திருநின்றவூர் திலீபன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). பெயிண்டராக வேலை செய்து வந்த இவர், நேற்று திருநின்றவூர் திலீபன் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக தோண்டப்பட்ட சுமார் 15 அடி பள்ளத்தில் திடீரென தவறி விழுந்து விட்டார். அந்த பள்ளத்தில் நிறைந்து இருந்த நீரில் மூழ்கிய அவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பொதுமக்கள் திருநின்றவூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் ரமேஷை பிணமாக மீட்டனர். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்