வேலூர்
பள்ளிகொண்டா, உதயேந்திரம், தேசூர், புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளன. நகர்ப்புற பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்திருந்தது.
தற்போது 490 பேரூராட்சிகளுக்கான இடஒதுக்கீட்டை அரசு அறிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளுக்கான இடஒதுக்கீடு விவரம் வருமாறு:-
ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கீடு
பெண்களுக்கு பள்ளிகொண்டா, உதயேந்திரம், தேசூர், புதுப்பாளையம் ஆகிய பேரூராட்சிகள் ஆதிதிராவிட பெண்களுக்கும், ஆலங்காயம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிகள் ஆதிதிராவிட பொதுப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பென்னாத்தூர், ஒடுகத்தூர், கலவை, கண்ணமங்கலம், சேத்துப்பட்டு, போளூர், திமிரி, வேட்டவலம், பனப்பாக்கம், பெரணமல்லூர், காவேரிப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகள் பெண்கள் பொதுப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.