செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவா. இவர், பம்மதுகுளம் ஊராட்சி வார்டு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவருடைய கணவர் ரமேஷ்(வயது 45). இவர், ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா என்பவரை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, வார்டு உறுப்பினரின் கணவர் ரமேசை அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷ், ஆவடி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் சோழவரம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.