மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, கடன் உதவி உட்பட 245 கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, திருவள்ளூர் மாவட்ட சப்-கலெக்டர்(பயிற்சி) மகாபாரதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.