மாவட்ட செய்திகள்

புதுக்கடை அருகே பரிதாபம்: ஓய்வு பெற்ற வங்கி மேலாளர், ஆட்டோ மோதி சாவு

புதுக்கடை அருகே ஓய்வு பெற்ற வங்கி மேலாளர், ஆட்டோ மோதி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

புதுக்கடை,

புதுக்கடை அருகே தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 62), ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவருக்கு ஜெயசாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக முன்சிறை- தேங்காப்பட்டணம் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ திடீரென நடேசன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் ஆட்டோவை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் நடேசனை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடேசன் பரிதாபமாக இறந்தார்.

பின்னர், இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த புதுக்கடை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்கு காரணமான ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்